திருமதி சுபாலினி இளங்கோ
யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாலினி இளங்கோ அவர்கள் 05-09-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், தங்கராசா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும், இளங்கோ(மருத்துவர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும், சுதர்சினி(மருத்துவர்- கனடா), சிவாஜினி(கொணிக்ஸ் தமிழ் வித்தியாலய ஆசிரியை- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணுகா, அபிஷாந்த், கவிஷ்ணுகா, கிருத்தீஷ், அனீஷ், தர்ஷ்விதன் ஆகியோரின் அன்புச் சித்தியும், நிர்மலராஜன்(கனடா), பாலமுருகன்(சுவிஸ்), துஷ்யந்தன்(அமெரிக்கா), மதுரா(இங்கிலாந்து), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரதீபா(அமெரிக்கா), மீராம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும், சுரேஷ்(இங்கிலாந்து) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், அபிரா,யமிரா, சஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2015 திங்கட்கிழமை அன்று மாதகல் வடக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பாலமுருகன் Bern பாலா(Tram, Bus) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|